பாக்குறவன் பாரு பாக்காதவன் போ.. பேட்டியில் திமிராக பேசிய பிக் பாஸ் அபிராமி..!
நோட்டா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அபிராமி வெங்கடாசலம் அறிமுகமானவர். இதனையடுத்து, ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கலாஷேத்திர விவகாரத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆனார் அபிராமி வெங்கடாசலம். இதனால், இவர் பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்கொண்டார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமிடம் தொகுப்பாளர் நீங்கள் யாரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி உடைகளை அணிகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அபிராமி எனக்கு அந்த மாதிரி இன்ஸ்பிரேஷன் என்று யாரும் கிடையாது. எனக்கு பிடித்த ஆடைகளை நான் போடுகிறேன். அதை பார்க்கிறவன் பாரு பாக்காதவன் போயிட்டே இரு என்று பதில் அளித்துள்ளார்.
Share this post