வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்.. சின்னத்திரையில் மாளவிகா- எந்த டிவி நிகழ்ச்சி தெரியுமா?
பல வருடங்களுக்கு முன்பு பட்டித்தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் இந்த பாடல் பெரிய அளவில் ரீச் ஆக ரசிகர்கள் மத்தியில் மாளவிகா பிரபலமானார்.
1999 ஆம் ஆண்டு உன்னைத் தேடி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா அதன் பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து டாப் நடிகையாக ஒரு காலத்தில் வளம் வந்தார்.
அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு நிறைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே இவர் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அதாவது 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், இன்டாவில் புகைப்படங்களையும் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா இப்போது, சூப்பர் நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் வரவுள்ளார். அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாளவிகா வர இருக்கிறாராம்.