'காசு குடுத்து போயிருக்கேன்னு அவரே சொல்லிருக்காரு..' கே.ராஜன் அவர்களை சிக்க வைத்த பயில்வான்

தமிழ் சினிமாவில் சிறு சிறு முக்கிய கதாபாத்திரங்களிலும், பிரபல காமெடி நடிகராகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது தனி யூடியூப் சேனலை தொடங்கி சினிமா வட்டாரத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து பேசி ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா துறையில் நடக்கும் விஷயங்களோடு விட்டு வைக்காமல், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பகிர்ந்து வருகிறார்.
நடிகர்-நடிகைகள் பலரும் இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி புகார் கூறி வருகின்றனர். நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பகுதியில் வசைபாடி வருகின்றனர். இதற்கு தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதன் பற்றி காவல் துறையில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் பயில்வானை பற்றிய பல விஷயங்களையும் குறிப்பிட்டு, அதில் திரையுலகில் மிக பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி பயில்வான் அவதூறான வார்த்தைகளை பேசுவது கண்டிக்கத்தக்கது.
இப்படி பொய்யான விஷயங்களைப் பேசி அதன் மூலம் அவர் பிரபலம் அடைய நினைக்கிறார். அவரை எதிர்த்து யாராவது பேசினால் உடனே அவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். மேலும் நடிகைகளை பற்றி பேசி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார் என்றும் ராஜன் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது, தயாரிப்பாளர் ராஜன் அவர்களும் பிரபல நடிகர் நடிகைகள் அவர்கள் சம்பளம் குறித்த ஒரு சில விஷயங்களை பற்றி மேடைகளில் பேசியுள்ளார்.
அதன் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் கட்சிக்காரன் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜன் கலந்துகொண்டு பேசி இருந்தார். ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்து கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் ராஜனிடம் சம்பந்தமில்லாமல் கேள்விகளை கேட்டார்.
இதற்கு ஆரம்பத்தில் பொறுமையாக ராஜன் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் என்னைப் பற்றி ஏன் மேடையில் பேசினீர்கள் என்று கேள்வி எழுப்பினார் பயில்வான். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவருமே வாடா போடா என்று ஒருமையில் பேசி இருந்தார்கள். அதிலும் ராஜன் மாமா பயலே போடா எச்சக்கலை நாயே என்று பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டி இருந்தார்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பயில்வான் ரங்கநாதன், கே ராஜன் குறித்து பகிரங்கமாக சில கருத்துகளை முன்வைத்தார். அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசியது அவர் தான் அதில், தயாரிப்பாளர் ராஜன் தான் என்னிடம் வம்பிழுத்தார். நான் தவறாக பேசியிருந்தால் அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அது இல்லாமல் என் பெயரை இழுத்தால், பப்ளிசிட்டி கிடைக்கும் என அவர் அடிக்கடி என்னிடம் பிரச்சினை செய்கிறார். இவர் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசவில்லையா? பெண்களைப் பற்றி பேசியது கிடையாதா? அவரை விடவா நான் மோசமா போய்விட்டேன்? எனக் கூறினார்.
மேலும், எப்போ பார்த்தாலும் பேசுவதெல்லாம், ‘நஷ்டம் நஷ்டம் நஷ்டம்…’ தான். ஏன், லவ் டுடே படம் லாபம் இல்லையா? ஜிஎஸ்டி பற்றி அரசியல் பேசுகிறார். ஒருவேளை அந்த படத்திற்கு விருது கொடுக்குறாங்கனு வெச்சுக்கோங்க, இந்தப் பேச்சு விருதுக்கு தடையா இருக்குமா இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். காசு கொடுத்து போனவர் தானே அவர் தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், எதற்கெடுத்தாலும் “நான் வண்ணாரப்பேட்டை வண்ணாரப்பேட்டை” என்று கூறுகிறார். ‘ஏப்பா… நீ வண்ணாரப்பேட்டை என்றால், என் பின்னாடி தமிழ்நாடே நிற்கும்’, பாக்குறீயா! என சவால் விட்டார் பயில்வான்.
மேலும், டிவி, யூடியூப்பில் அவருடன் விவாதிக்க சம்மதமா என்று என்னை அழைத்தார்கள். நான் ரெடி, அவரை வரச்சொல்லுங்க. நான் இல்லாத போது என்னை பற்றி பேசுவது; நான் வருவதாக இருந்தால் அங்கிருந்து வெளிநடப்பு செய்வது என இருக்கிறார். நான் உன் குடும்பத்தை கெடுத்தேனா, இல்லை, உன் குடும்பத்தோடு நீ வாழாமல் இருக்க நான் காரணமாக இருந்தேனா? எனவும் காட்டமாக பேசினார். அதேபோல், அந்த ஆளு தான், நானும் பெண்களிடம் உறவாடியிருக்கிறேன், ஆனால், அதற்கு பணம் கொடுத்திருக்கிறேன் என்று அவரே யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் எனவும் பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பப்ளிசிட்டிக்காக சண்டை செய்கிறார் மேலும், “நான் யூடியூப்பில் பேசுகிறேன் என்றால், லட்சக்கணக்கானோர் பாக்குறாங்க, ரசிக்கிறாங்க. இத்தனைக்கும் நான் சொந்த யூடியூப் நடத்தவே இல்லை. வேண்டுமென்றை அவரது பப்ளிசிட்டிக்கு என்னை இழுத்தால் நான் சும்மா விடுவேனா? கட்சிக்காரன் படத்திற்கு ஜிஎஸ்டி.,க்கும் என்ன சம்மந்தம். மேடை நாகரீகத்தை எப்போது கடைபிடித்தான் அந்த ஆளு. நான் இல்லாத போது பேசுகிறார், நான் இப்போ வந்திருக்கிறேன் இப்போ பேசு என முன்னாடி வந்து நின்றேன் அதுதான் நடந்தது. நான் ஆதித்தனாரால் வளர்க்கப்பட்டவன். 45 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர், சோமன் பாபு வரை எல்லாரிடமும் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை” எனக் கூறினார். பயில்வான் ரங்கநாதனின் இந்தப் பேட்டி வைரலாகி வருகிறது.