777சார்லி - படத்தை பார்த்து கதறி அழுத முதல்வர்.. அந்த சார்லி தான்ங்க ஹீரோ !

Basavaraj bommai cried after watching 777charlie movie

இந்திய சினிமாவே கன்னட திரையுலகை திரும்பி பார்க்கும் அளவிற்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. கே ஜி எஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு கன்னட திரையுலகிற்கும் அதன் நடிகர் நடிகைகளுக்கும், படத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது உண்மை.

Basavaraj bommai cried after watching 777charlie movie

அந்த வகையில், கன்னட சினிமாவில் ஒரு வெற்றி படமாக வெளியாகியுள்ள படம் 777 சார்லி. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாத இளைஞராக வரும் ரக்ஷித் ஷெட்டி தனக்கென்று ஒரு உறவு, நட்பு என எதுவும் இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார்.

Basavaraj bommai cried after watching 777charlie movie

ஒருநாள் இவர் வீட்டிற்கு ஒரு நாய் அடைக்கலம் தேடி வருகிறது. முதலில் அந்த நாயை வெறுக்கும் ரக்ஷித் ஷெட்டி பிறகு அந்த நாயுடன் நெருங்கி பழகி விடுகிறார். அந்த நாய் மட்டுமே தனது சொந்தம் என்கிற அளவிற்கு மாறிவிடும் அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

Basavaraj bommai cried after watching 777charlie movie

அவர் ஆசை ஆசையாக வளர்க்கும் அந்த நாய்க்கு கேன்சர் நோய் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்த ரக்ஷிட் ஷெட்டி நாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடுகிறார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

Basavaraj bommai cried after watching 777charlie movie

கிரிக் பார்ட்டி, அவனே ஸ்ரீமன் நாராயணா போன்ற படங்கள் மூலம் பிரபலம் அடைந்த கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இப்படம் எடுக்கப்பட்ட விதத்தில் பார்ப்பவர் கண்களை கலங்க செய்துள்ளது. பொதுவாக செல்லப்பிராணி படம் என்றாலே அதன் குறும்புத்தனம், சாகசம், பாசம் என முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சமாகவே எடுக்கப்படும் படங்களின் மத்தியில் ஒரு மனிதருக்கும் நாய்க்குமான பாசப் போராட்டத்தை மிக அருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் கிரன் ராஜ்.

Basavaraj bommai cried after watching 777charlie movie

செல்லப்பிராணிகள் விரும்பாதவர்கள் கூட கதையோடு ஒன்றிவிடும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இப்படம். ஹீரோக்கு அடுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது அந்த நாய் மட்டுமே. சார்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நாய் ஹீரோக்கு டப் கொடுத்து நடித்துள்ளது. சின்ன சின்ன ரியாக்ஷன்ஸ் கொடுப்பது ஒரு தேர்ந்த நடிகரை போலவே நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது சார்லி.

Basavaraj bommai cried after watching 777charlie movie

சார்லி நாயை நன்றாக தயார் செய்துள்ளார் பயிற்சியாளர் பிரமோத். அவருக்கு பாராட்டுக்கள். முதல் பாதி முழுவதும் கலகலப்பாகவும், 2ம் பாதி முழுவதும் உணர்ச்சி பூர்வமாக கண்களை கலங்கவைத்து நெகிழ்ச்சி ஏற்படும்படியும் உருவாகியுள்ளது இந்த 777 சார்லி திரைப்படம்.

Basavaraj bommai cried after watching 777charlie movie

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதை நினைத்து கதறி அழுதுள்ளார். முதல்வர் கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Basavaraj bommai cried after watching 777charlie movie

Share this post