ஷூட்டிங்கில் பலூன் வெடித்து ஏற்பட்ட விபத்து.. லைலா சொன்ன அதிர்ச்சி தகவல் !

Actress laila interview about past incident during shooting

லைலா என்ற பெயர் கேட்டவுடன் நமக்கு நியாபகம் வருவது அவரது கன்னக்குழி, குட்டி கண்கள் மற்றும் சிரிப்பு நிறைந்து முகம். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் நடிகை லைலா பிதாமகன் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மற்றும் இவரது டயலாக் இன்றும் யாரும் மறக்க வாய்ப்பில்லை.

Actress laila interview about past incident during shooting

பிதாமகன் படத்தில் இவரது லூட்டியின் வைத்தே இவருக்கு ஏராளமான ரசிகர்கள். லூசாப்பா நீ என இவரது டயலாக் இன்னும் நிறைய பேர் சாதாரணமாக பயன்படுவதுண்டு. மேலும், தில் படத்தில் இவர் செய்யும் சமையல் மற்றும் பைக்கில் திரும்பி உர்காந்து செல்வது போன்றவை செம பிரபலம்.

Actress laila interview about past incident during shooting

ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை லைலா. பின்னர், கள்ளழகர் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து, முதல்வன் படத்தில் ஒரு முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Actress laila interview about past incident during shooting

தமிழில், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், அள்ளி தந்த வானம், நந்தா, மௌனம் பேசியதே, உன்னை நினைத்து, பிதாமகன், கம்பீரம், ஜெயசூர்யா, உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், திருப்பதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actress laila interview about past incident during shooting

இவர் நடித்த அனைத்து படங்களுமே ஏறக்குறைய நல்ல வரவேற்பு பெற்று வந்தது. அஜித்துடன் பரமசிவன் மற்றும் திருப்பதி ஆகிய படங்களில் நடித்த லைலா, அதன்பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு, கடந்த 2006ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலனான மெஹ்தின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Actress laila interview about past incident during shooting

திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது நடிகை லைலா 16 ஆண்டுகளுக்கு பின் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Actress laila interview about past incident during shooting

இவர் விஜய்யுடன் உன்னை நினைத்து படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து விஜய் விலகி விட சூர்யா கதாநாயகனாக நடித்தார். ஆகவே விஜய் தான் என்னிடம் இருந்து தப்பிய ஒரே நபர் என்று சமீபத்தில் பேட்டியில் நடிகை லைலா கிண்டலாக தெரிவித்திருந்தார்.

Actress laila interview about past incident during shooting

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்று இருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லைலா, சென்னை என் மனதுக்கு நெருக்கமான ஊர். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் இங்கே தான் இருக்கிறார்கள். இத்தனை வருஷமாக நான் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி வந்து தோழிகளோடு நேரம் செலவிட்டு செல்வேன்.

Actress laila interview about past incident during shooting

நான் வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். சினிமாவில் நடிக்கணும் என்று கனவிலும் நான் நினைத்ததில்லை. பாலிவுட் காமெடி நடிகர் தான் என்னை நடிகையாக அறிமுகப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிளாமர் டிரஸ் செட்டாகவில்லை. அதனால் தான் நான் ஹோம்லி ரோலில் நடித்தேன். இதன் காரணமாக சில பட வாய்ப்புகளையும் தவிர்த்திருக்கிறேன்.

Actress laila interview about past incident during shooting

என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய படம் என்றால் Naa Hrudayamlo Nidurinche Cheli தெலுங்கு படம். அந்த படத்தில் நான் கேக் கட் பண்ணற மாதிரி ஒரு சீனில், ஹீலியம் பலூன் வெடிக்க வைக்கும் திட்டம் போட்டு இருந்தார்கள். எதிர்பாராத வகையில் பயங்கர சத்தத்துடன் அந்த பலூன் வெடித்ததில் எப்படியோ காயமில்லாமல் தப்பித்தேன். ஆனால், அந்த விபத்தில் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சுலபமாக வெளி வர முடியவில்லை.

Actress laila interview about past incident during shooting

அதற்கு பிறகு கொஞ்ச நாளுக்கு சூட்டிங்கில் நான் கலந்து கொள்ளவில்லை. என்னை சமாதானப்படுத்தி பிறகு தான் மறுபடியும் நடித்துக் கொடுத்தேன். அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போது கூட பயமாக இருக்கிறது. நான் ஜோடியாக நடித்த ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், இளம் நடிகர்களுக்கு அக்காவாக நடிக்க எனக்கு விருப்பமில்லை.

Actress laila interview about past incident during shooting

சஸ்பென்ஸ், திகில், வில்லி மாதிரி உள்ள ரோலில் நடிக்கணும் என்று எனக்கு ரொம்பவே ஆசை. அப்படியான கதை வந்தால் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பேன்’ என்று கூறியிருந்தார்.

Share this post