சரத்குமார் - தேவயானி பட கதையை உருட்டி வரும் பாரதி கண்ணம்மா சீரியல்... கேலி செய்யும் நெட்டிசன்கள்!

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் மத்த சேனல்களை பின் தள்ளி டிஆர்பி ரேஸில் முதல் 5 இடங்களில் பிடித்து வருவது வழக்கம். அப்படி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மா தொடர் டாப் இடத்தில் இருந்து வந்தது. இல்லத்தரசிகள் பேவரைட் ஆக மாறிய இத்தொடர், ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

டிஆர்பியில் டாப் இடத்தை பிடித்து வரும் சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இத்தொடரில் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன், சில பல கமிட்மென்ட் காரணமாக இத்தொடரை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக, வினுஷா ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஓடி டிஆர்பியில் முன்னணியில் இருந்து வந்த இந்த தொடர், தற்போது மோசமான விமர்சனங்களை அதிகம் பெற்று வருகிறது. ஒரே கதையை சஸ்பென்ஸ் என்ற பெயரில் ஜவ்வு போல இழுத்து வருவதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

இந்த சீரியலை எப்போ தான் முடிப்பீங்க என நெட்டிசன்களே தினமும் கேட்கும் அளவுக்கு சீரியல் சென்றுகொண்டிருக்கிறது. சீரியலில் ஹேமா வேடத்தில் நடித்து வரும் லிசா சீரியல் இயக்குனர் அகிலன் அஞ்சலி உளிட்டோருடன் இணைந்து வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் மக்கள் சீரியலை எப்படா முடிப்பீங்க என கேட்கிறாங்க ஆனால் எங்களுக்கு எண்டே கிடையாது என கூறுவது போல தெரிவித்திருந்தனர்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பாரதியின் டிஎன்ஏ ரிசல்ட் வந்துவிடவே, பாரதி உண்மையை தெரிந்து கொள்கிறார். எனவே கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடித்த பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர்வார்கள், சீரியலுக்கு சுபம் போடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் கண்ணம்மா ஏற்க மறுத்தார்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

இப்படியான நிலையில், இந்நிலையில், கண்ணம்மா மற்றும் மகள்களும் சொந்த ஊருக்கு போகவே, ஊர் ஊராக சென்று கண்ணம்மாவை தேடிய பாரதி அவர் இருக்கும் ஊருக்கே சென்று விட்டார். கண்ணம்மாவை அழைத்து போக வருகையில் ஊர் மக்கள் பாரதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் பாரதி எப்படி கண்ணம்மாவை சமாதானப்படுத்தி அழைத்து செல்வார் என்று புதிய கதை தொடங்கியுள்ளது.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம், வெண்பா கண்ணம்மாவை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று புதிய திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த கதை சரத்குமார், நம்பியார், தேவயானி நடித்த மூவேந்தர்களின் கதை போல உள்ளது என்று கூறி விமரிசித்து வருகின்றனர்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

சரத்குமார் நடித்த மூவேந்தர்கள் படத்திலும் தேவயானி கோவித்து கொண்டு வீட்டிற்கு வரவே சரத்குமார் அங்கு வந்தது சமாதனப்படுத்தி எப்படி கடைசியில் ஒன்றாக இணைகிறார்கள் என்பதுதான் கதை. இந்நிலையில் இதற்கடுத்தாவது சீரியல் முடியுமா என்று கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

barathi kannamma serial story trolled as similar to moovendhar movie story

Share this post