Viral Video: 'ரித்திகா, ஆரவ், முகேன், லாஸ்லியா எல்லாம் இந்த சீசன்ல இருந்தா அடையாளமே தெரியாம போய்ருப்பாங்க' மட்டம் தட்டி பேசிய அசீம் & தனா
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, ராப் பாடகர் ஏ.டி.கே, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன் பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மெட்டி ஒலி சாந்தி, கானா பாடகர் அசல், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, மாடல் குயின்சி, ஜனனி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர். ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார் அசீம்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் ‘பிக்பாஸ் சீசன் 4ல் ஆஜீத் எல்லாம் அந்த சீசனில் ஒன்றுமே செய்யவில்லை. ஆஜித், கேப்ரில்லா, ஷிவானி, ரியோ போன்ற அனைவரும் பெரிதாக ஒன்றும் பண்ணவில்லை. நிஷா ஏன் வந்தார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை பார்க்கிறவர்களுக்கும் புரியவில்லை’ என பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.
அசீம் சொன்ன இந்த விஷயத்தை பலர் விமர்சித்து வந்தாலும், அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்நிலையில், மீண்டும் அசீம் கடந்த சீசனை விட்டுவிட்டு அதற்கு முந்தய சீசன் குறித்து பேசி இருப்பது பேச்சுபொருளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில், சீசன் 3 போட்டியாளர்கள் குறித்து அசீம் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில் ‘ரித்திகா, ஆரவ், முகேன், தர்ஷன் இவர்களெல்லாம் இந்த சீசனில் இருந்திருந்தால் அடையாளமே தெரிந்திருக்காது’ என்று அசீம் கூறி இருந்தார். இதை தொடர்ந்து, இந்த சீசனில் லாஸ்லியா, முகேன் எல்லாம் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே வெளியில் சென்று இருப்பார்கள் என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.
#ClownAzeem bad mouths previous season contestants, says #Riythvika #Aarav #Thrashan #MugenRao if they have come to #BiggBossTamil6 they would go unnoticed N disappeared. #Dhana badmouth #Losliya #BiggBossTamil #BiggBoss6Tamil #Vikraman #vikraman𓃵 #AramVellum #VaathiVikraman pic.twitter.com/BIv7j03MFw
— siva (@winsiva1994) December 17, 2022