'அது ஒரு லூசு.. எனக்கு ஒரு பீடி குடு..' என சேட்டை செய்த ரஜினி.. வைரல் வீடியோ !

Assistant director shares his experience in dharmayuddham film video getting viral

தமிழ் திரையுலகை பொருத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் ரசிகர் கூட்டம் என்ன படையே உள்ளது என்பது தான் உண்மை.

Assistant director shares his experience in dharmayuddham film video getting viral

அந்த வகையில், தற்போது இவரது throwback சம்பவம் குறித்து உதவி இயக்குனர் ஒருவர் பேசிய வீடியோ செம வைரல் ஆகி வருகிறது. அதில், அவர் தர்மயுத்தம் படம் நடிக்கும் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை குறித்து ஒரு சேனல்க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Assistant director shares his experience in dharmayuddham film video getting viral

இயக்குனர் சக்தி இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்து வெளியான திரைப்படம் தர்மயுத்தம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனரிடம் பயங்கரமாக திட்டு வாங்குவாராம் ரஜினி. அவர் திட்டு வாங்காத நாளே இல்லை, ஆனால் அவரை நேரடியாக திட்டாது வேறு விதத்தில் திட்டுவார் என கூறியுள்ளார்.

Assistant director shares his experience in dharmayuddham film video getting viral

இது ரஜினிக்கும் தெரியும் என்பது தான் பெரிய ஆச்சர்யமே. அப்படி ஒரு நாள், ரஜினியையும் உதவி இயக்குனரையும் இயக்குனர் திட்ட, மனமுடைந்த அந்த உதவி இயக்குனர் அழுதுவிட்டாராம்.

Assistant director shares his experience in dharmayuddham film video getting viral

அதை கவனித்த ரஜினி ‘அது ஒரு லூசு அப்படி தான்.. பீடி இருக்கா’ என கேட்டுள்ளார்.ரஜினியிடம் சிகரெட் வாங்கி உதவி இயக்குனர் பிடித்ததாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

Share this post