இணையத்தில் லீக்கான ‘அவதார் 2’ டிரைலர் !

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமெரூன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அவதார். டெக்னாலஜி வளர்ந்து வரும் சமயத்திலேயே பிரம்மாண்டத்தின் உச்சம் காட்டி எடுக்கப்பட்ட இப்படம் உலக சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியது. பாக்ஸ் ஆபிஸிலும் 2500 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

அவதார் படத்தின் வெற்றிக்கு பின் அப்படத்தின் அடுத்த பாகம் உருவாவதை உறுதி செய்த ஜேம்ஸ் கேமரூன், படத்தின் பணிகளிலும் மும்முரம் காட்டி வந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே, அப்படம் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இருந்தது.

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

அவதார் 2ம் பாகத்தை 2020ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் தாமதம் ஆனது.

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

இதனால், அவதார் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தை தயாரித்துள்ள டுவெண்டியத் செஞ்சுரி நிறுவனம், இப்படம் இந்தாண்டு ரிலீசாகும் என அறிவித்தது. இப்படத்துக்கு ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (Avatar: The Way of Water)’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

இந்நிலையில், அவதார் 2 வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி உலகமெங்கும் 160க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. வரும் மே 6ம் தேதி வெளியாகும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்துடன் அவதார் 2 படத்தின் டிரைலரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Avatar 2 trailer video leaked on social media and viral on internet

ஆனால் தற்போது அவதார் 2 படத்தின் ஒட்டுமொத்த டிரைலரும் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீக்கான டிரைலரை உடனடியாக தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி தங்களது சைபர் டீமை வைத்து வீடியோக்களை அதிரடியாக நீக்கியது.

Share this post