மேடையில் மனைவியை நினைத்து கண்கலங்கி நின்ற அருண்ராஜா.. ஆறுதல் சொன்ன SK.. வைரலாகும் வீடியோ !

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

2019ம் ஆண்டு இந்தியில் ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள்15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதி அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்னும் புத்தகத்தின் பெயரையே இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

2021ம் ஆண்டு டிசம்பர் மாதமே இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடை நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு மே 20ம் தேதி தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இன்று மாலை 6.30 மணிக்கு யூட்யூப் தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

சென்னையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அன்புச் செழியன், போனி கபூர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி, டைரக்டர் அருண்ராஜா காமராஜ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் டைரக்டர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து பற்றி பேசினார். சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜா நெருங்கிய நண்பர்கள்.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

என் நண்பனின் இழப்பு என சிவகார்த்திகேயன் கூறவே, அப்போது மேடையிலேயே கண்கலங்கி விட்டார் அருண்ராஜா காமராஜ். அவரின் மனைவி சிந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Arunraja kamaraj crying on stage thinking his wife on nenjuku needhi audio launch show

ஆனால் தற்போது வரை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தனது மனைவியின் பிறந்தநாள், திருமணநாள் அனைத்திற்கும் மனைவியை நினைத்து உருக்கமாக போஸ்ட் பதிவிட்டு வருகிறார் அருண்ராஜா.

Share this post