தமிழ் படத்தில் சன்னி லியோனுடன் கூட்டணி அமைக்கும் குக் வித் கோமாளி பிரபலம்..! அடடா நெனைக்கவே சூப்பரா இருக்கு !

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

தொலைக்காட்சி சீரியல் தொடர்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. தனது சிறு வயது முதலே மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வந்தவர். மாடலிங் செய்யும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

அதனைத் தொடர்ந்து, சன் டிவியில் ‘மின்னலே’ தொடரிலும், விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புகழ் உடன் கொண்ட சேட்டைகள் மூலம் சோசியல் மீடியா பேமஸ் ஆகி இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

மேலும், நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சி உடல்வாகு தோற்றம் கொண்ட தர்ஷா குப்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார்.<div align="center" class="ad"> </div>

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

யூடியூப் சேனல், சோசியல் மீடியா என செம பிசியாக வலம் வரும் தர்ஷா, பட வாய்ப்புகளுக்காக, பிற நடிகைகளை போல தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவவிட்டு வருகிறார்.

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

தற்போது இவருக்கு ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய தோற்றத்தில் வந்துள்ளார் தர்ஷா. இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தர்ஷா குப்தாவின் கேரக்டரை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சௌம்யா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

Dharsha gupta to act with sunny leone in oh my ghost tamil movie

Share this post