பிக் பாஸ் அனுயாவா இது? இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க? இணையத்தில் வைரலாகும் வீடியோ !

Anuya recent video posted on instagram getting viral

சிவா மனசுல சக்தி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனுயா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இவருக்கு நல்ல பரிச்சயம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மதுரை சம்பவம், நகரம்,நஞ்சுபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Anuya recent video posted on instagram getting viral

தமிழ் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால், நண்பன் மற்றும் நான் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். இது மட்டுமின்றி, ஹிந்தி, பெங்காலி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Anuya recent video posted on instagram getting viral

நீண்ட இடைவெளிக்கு பின்னர், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால், முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார். அதன் பின்னர், தனது சமூக வலைத்தளங்களில் போட்டோ வீடியோ என பதிவிட்டு வந்த இவர், தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டு அனைவரையும் ஷாக் செய்துள்ளார்.

Anuya recent video posted on instagram getting viral

கொஞ்சம் வெயிட் போட்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் அனுயாவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this post