'6 மாசம் தூங்கல.. இதுனால தான் வரல' செஸ் ஒலிம்பியாட் விழாவில் பங்கேற்காதது குறித்து விளக்கமளித்த அறிவு & சந்தோஷ் நாராயணன் !
கடந்த 2021ம் ஆண்டு வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. இப்பாடலை பாடகி தீ மற்றும் பாடகர் அறிவு இணைந்து பாடி, நடித்து இந்த ஆல்பம் பாடலை வெளியிட்டனர். இதனை சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார்.
இப்பாடல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற 44வது ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் ஏ ஆர் ரகுமானின் ஆந்தம் பாடலுடன் என்ஜாய் என்ஜாமி பாடலும் பாடப்பட்டது. அதனை பாடகிகள் தீயும், கிடாக்குழி மாரியம்மாளும் பாடினர். ஆனால் இந்த டீமில் அறிவு இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அது குறித்தான வினாக்களும் சமூக வலைதளத்தில் உலா வந்தது.
இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்திருந்தார். அதில், அவர் வேறு ஒரு பணிக்காக வெளிநாட்டுக்கு சென்றதாக கூறியிருந்தார். இவரைத் தொடர்ந்து, பாடகர் அறிவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பதிவிட்ட பாடகர் அறிவு, ‘இப்பாடலை எழுதி கம்போஸ் செய்து, பாடியது நான். இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதை எழுதுவதற்கு யாரும் எனக்கு மெட்டுக்கள் தரவில்லை. ஒரு வார்த்தைகள் கூட யாரும் தரவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தூங்காமல் கடுமையாக இயற்கையாக உழைத்து இருக்கிறேன். நீங்கள் தூங்கும் போது தான் உங்கள் செல்வங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. விழித்திருக்கும் போது அல்ல ஜெய்பீம் கடைசியில் உண்மைதான் எப்போதும் வெல்லும் என்று பதிவிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், தற்போது, இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் வெளியிட்டுள்ள நீண்ட கடிதத்தில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நமது வேர்களையும் இயற்கையையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் என்ஜாயி எஞ்சாமி பாடலை கம்போஸ், ப்ரோக்ராமிங் மற்றும் ரெக்கார்டிங் செய்து சிங்கராகவும் பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் தயாரிப்பாளர் என்று குறிப்பிடப்படுகிறது. இதை இண்டிபெண்டன்ஸ் பேஷன் என பலர் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.
நான் தீ அறிவு மூவரும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் அன்பிற்காகவும் இண்டிபெண்டன்ஸ் இசையமேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம். பாடலில் ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அறிவுக்கு நன்றி. பந்தலிலே பாவக்காய் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடலாகும். ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களையும் போலவே நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளை பயன்படுத்துவேன் அவற்றில் என்ஜாயி எஞ்சாமியும் ஒன்று.
இந்த பாடலின் மொத்த வருமானமும், உரிமைகளும் தீ, அறிவு மற்றும் நான் மூவரும் சமமாக பகிர்ந்து கொண்டோம். கலைஞர்கள் தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் எந்த ஒரு பாரபட்சமின்றி அவர்களுக்கு கிரெடிட் கொடுத்துள்ளேன். என்ஜாய் என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றி எனது பேச்சு அதற்கு சாட்சி.
தீ மற்றும் கீழங்குடி மாரியம்மாளின் என்ஜாயி எஞ்சாமி நிகழ்ச்சியை பொருத்தவரை வெளிநாட்டில் இருந்ததால் அதில் அரிவால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்கா பயணத் திட்டம் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்’ என கூறியுள்ளார்.
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022