கல்யாணம் செய்துகொள்வதாக ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை திவ்யபாரதி.. இளைஞர் பரபரப்பு புகார்

Anandharaj complains about supporting actress divyabharathi

திண்டுக்கல் கொடைக்கானலைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது, ஏஜென்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

Anandharaj complains about supporting actress divyabharathi

சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளவர் திவ்யபாரதி. சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரை நடிக்க வைத்து கவிதை தொகுப்புகளை இணைத்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார் ஆனந்த்ராஜ். அப்போது இருவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறிவிட்டது.

Anandharaj complains about supporting actress divyabharathi

ஆனந்த்ராஜ் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறும்போது, ஏதேனும் காரணங்களை கூறி முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார் திவ்யபாரதி. இதனால் அவர் மீது ஆனந்த்ராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திவ்யபாரதி பற்றி விசாரித்துள்ளார் ஆனந்த்ராஜ், அப்போது அவரைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

Anandharaj complains about supporting actress divyabharathi

திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்ததும் மனமுடைந்து போன ஆன்ந்த்ராஜ். திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Anandharaj complains about supporting actress divyabharathi

Share this post