வெறித்தனமான போட்டோவுடன் வெளியான துருவ நட்சத்திரம் மாஸ் அப்டேட் !

Dhruva natchathiram update released by gautham menon with photo

பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். விளம்பர படங்களில் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இவர், என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Dhruva natchathiram update released by gautham menon with photo

ஆரம்ப காலங்களில் பெரிதும் பிரபலம் அடையாத இவர், சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

Dhruva natchathiram update released by gautham menon with photo

நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். இவரது மகன் துருவ் விக்ரம், தற்போது, ஆதித்யா வர்மா, மஹான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Dhruva natchathiram update released by gautham menon with photo

தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார். 2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

Dhruva natchathiram update released by gautham menon with photo

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் 90% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படம் பற்றி அறிவிப்பு ஏதுமின்றி இருந்து வந்தது.

Dhruva natchathiram update released by gautham menon with photo

இப்படி, கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது உயிர் பெற்றுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க இயக்குனர் கவுதம் மேனன் தயாராகி உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்ரம் மற்றும் கவுதம் மேனன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார். இயக்குனர் கவுதம் மேனன் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்து ‘நட்சத்திரங்கள் மீண்டும் சேர்கிறது’ என பதிவு செய்துள்ளார்.

Dhruva natchathiram update released by gautham menon with photo

துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் தொடங்கப்படுவதற்கு நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என கூறப்படுகிறது. அவரின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றி உள்ளதாகவும், அதனால் தான் விரைவில் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this post