தனது விவாகரத்து முடிவு குறித்த ஷாக்கிங் உண்மையை பேட்டியில் போட்டுடைத்த அர்ச்சனா..!
சன் தொலைக்காட்சியில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மற்றும் விஜே வுமான அர்ச்சனா.
ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில மொழி செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், காமெடி டைம் நிகழ்ச்சியில் நடிகர் சிட்டி பாபுவுடன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.
பின்னர், கல்யாணம, குழந்தை என கலை துறையில் இருந்து விலகி இருந்த அர்ச்சனா, 2008ம் ஆண்டு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வந்து 2014ம் ஆண்டு வரை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கலக்க போவது யாரு, வீடு மனைவி மக்கள், செலிபிரிட்டி கிச்சன், சரிகமப சீனியர்ஸ், ஜூனியர்ஸ் சீசன் 1 & 2 போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் பல விமர்சனங்கள் பெற்றார்.
நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் அர்ச்சனா, தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அர்ச்சனாவின் கணவர் வினீத் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் சாரா திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், சோசியல் மீடியா ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார். அர்ச்சனா மீடியா துறையில் அடியெடுத்து வைத்து 23 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவருக்கென சில நிகழ்ச்சிகள் நடந்தது. அப்படி ஒரு நிகழ்ச்சியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அர்ச்சனா மற்றும் வினீத் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருந்ததாக அதிர்ச்சி தகவலை அவரே தெரிவித்து இருக்கிறார்.
“இருவரும் வெவ்வேறு துறையில் இருப்பதால் அடிக்கடி பிரச்சனை வந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பிரிய முடிவெடுத்துவிட்டோம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினீத்துக்கு திடீரென விசாகபட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைத்தது. மகள் சாரா எங்களிடம் பேசினார். ஒருவரை விட்டு இன்னொருவர் வாழ முடியுமா என யோசித்துக்கொள்ளுங்கள் என கூறினாள். 20 வருடங்களுக்கு முன்பு எப்படி காதலித்தோமோ அதை போலவே கடந்த 15 நாட்களாக இருந்து வருகிறோம்” என அர்ச்சனா கூறி இருக்கிறார்.