பில்லா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்கவிருந்த பிரபல தமிழ் பட ஹிட் நடிகை.. போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!
2007ம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான அதிரடி கேங்ஸ்டர் திரைப்படம் “பில்லா”. இத்திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்தது. இந்த திரைபடத்தில் அஜித் ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
இவர்களுடன் நமிதா, பிரபு, ரஹ்மான், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் அஜித், நயன்தாரா இருவருமே தங்களது ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்நிலையில், பில்லா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக முதலில் நடிக்க பிரபல நடிகையின் போட்டோஷூட் இணையத்தில் கசிந்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் நயன்தாரா நடித்த ஷாஷா கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானவர் நடிகை அசின். ஆனால் அப்போது அவருக்கு கால்ஷீட் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் அந்த ரோல் நயன்தாராவுக்கு கிடைத்தது. அசினை வைத்து படக்குழுவினர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.