துப்பாக்கி படத்தை விமர்சித்த சூர்யா ரசிகர்.. ஏ.அர்.முருகதாஸ் வைரல் ட்வீட் !

அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ்.
இதனைத் தொடர்ந்து, ரமணா, கஜினி, 7ம் அறிவு, துப்பாக்கி என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை தந்து தமிழ் திரையுலகை மட்டுமல்லாது இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் முருகதாஸ்.
கத்தி, சர்க்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கி படத்தை விமர்சித்த சூர்யா ரசிகருக்கு பதிலளித்த ஏ.அர்.முருகதாஸ் அவர்களின் ட்வீட் செம வைரல் ஆகி வருகிறது. 2012ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. விஜய்யின் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியடைய தவறி வந்த நிலையில், விஜய் - முருகதாஸ் கூட்டணியில் தாணு தயாரிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அப்படத்தை தொடர்ந்து, விஜய்க்கு அனைத்தும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தது. மேலும், துப்பாக்கி திரைப்படம் விஜய்யின் திரைபயணத்தில் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாகவும் அமைந்தது. அப்படியான பிரம்மாண்ட வெற்றியடைந்த துப்பாக்கி திரைப்படம் வெளியான சமயத்தில் சூர்யாவின் ரசிகர் ஒருவர், துப்பாக்கி திரைப்படம் வெளியாகும் முன் இயக்குநர் முருகதாஸை டேக் செய்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
“இந்தாண்டில் சூர்யாவின் மாற்றான் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸை ஆட்டி படைக்க உள்ளது. மற்றவர்கள் ஒதுங்கி இருங்கள்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு முருகதாஸ் “பாப்பா தள்ளி போய் விளையாடு” என பதிவிட்டு இருந்தார். அந்த ட்வீட் தற்போது செம வைரல் ஆகி வருகிறது. அந்த வருடத்தில் துப்பாக்கி திரைப்படம் தான் அதிக வசூலை குவித்தது எனபது குறிப்பிடத்தக்கது.