ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரில் அஜித்தின் மாஸ் போஸ்.. வைரலாகும் கிளிக்ஸ்
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.
பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார்.
இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.
இந்நிலையில், அஜித் குமார் ஏர்போட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வந்தது. தற்போது, அஜித் குமார் வெளிநாட்டில் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நாள் பைக் ட்ரிப்பை முடித்துவிட்டு லண்டன் சென்ற அஜித் அங்கு ஜாலியாக சுற்றிப்பார்த்து வருகிறார். அந்த வகையில் கார் மீது அதீத ப்ரியம் கொண்ட அஜித் லண்டனில் உள்ள மெக்லரேன் என்கிற ஆடம்பர கார் ஷோரூமுக்கு சென்று அங்கு உள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். அப்போது அந்த காரின் அருகே நின்று போட்டோவும் எடுத்துள்ளார்.
அந்த காரின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர நதியோரம் அமைந்துள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஸ்டைலாக அமர்ந்தபடி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அஜித் மிகவும் ஸ்லிம்மான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.
லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்ப உள்ள அஜித், அடுத்த மாதம் ஏகே61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.