இனி சினிமா & டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்க கூடாது.. மீறினால் 3 வருடம் சிறை - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி

Child artists are not allowed to act in several timings order issued

திரையுலகை பொருத்தவரை தற்போது குழந்தை நட்சத்திரங்கள் அதிகளவு வரவேற்பு பெற்று வருகின்றனர். ஆரம்ப காலத்தில் குட்டி பத்மினி, நடிகை ஸ்ரீதேவி, கமல் தொடங்கி பல நட்சத்திரங்கள் குழந்தை நட்சத்திரங்களாக தங்களை நடிப்பு பயணத்தை தொடங்கி தற்போது பெரிய பிரபலன்களாக வளர்ந்துள்ளனர்.

Child artists are not allowed to act in several timings order issued

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில், தெய்வத் திருமகள் பேபி சாரா, அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் நடித்த பேபி அனிகா மற்றும் தெறி படத்தில் விஜய் மகளாக நடித்த பேபி நைனிகா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றனர்.

Child artists are not allowed to act in several timings order issued

இதையடுத்து, இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த மானஸ்வி தன்னுடைய துறுதுறு பேச்சால், அதிரடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில், youtube மூலம் பிரபலமடைந்து தற்போது O2 படத்தில் நயன்தாராவிற்கு மகனாக நடித்த ரித்விக் நல்ல வரேவேற்பை பெற்றுள்ளார்.

Child artists are not allowed to act in several timings order issued

சுட்டி பேச்சு, மழலை நடிப்பு என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும், தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமா வளர்ந்து வரும் நிலையில், இந்த தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Child artists are not allowed to act in several timings order issued

அமெரிக்காவில் சமீபத்திய ஆய்வின் படி, ஒவ்வொரு குழந்தையும் , ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி இருக்க சினிமாவில் நடிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்..? என்ற அச்சம் எழுந்துள்ளது.

Child artists are not allowed to act in several timings order issued

இந்நிலையில், தற்போது 3 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது, 3 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும், என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவோ, இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை பணியாற்றவோ அனுமதிக்க கூடாது. குறிப்பாக, கேலிக்கு ஆளாகும் பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால், மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share this post