HD குவாலிட்டியில் லிப்லாக் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!
நடிகை அமலா பால் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அமலா பாலின் நண்பரான ஜெகத் தேசாய் அவருக்கு பிரபோஸ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் அமலாவின் முதல் திருமணம் நடந்தது. நான்கு வருட உறவுக்குப் பிறகு திருமணம் நடந்தது. இருப்பினும், அவர்கள் 2017 இல் விவாகரத்து செய்தனர். பின்னர், நட்சத்திர பாடகரும் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங்குடன் லிவ்ங்டு கெதரில் உறவில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகளும் படங்களும் பரவின. இதுகுறித்து பேசிய அமலாபால் பவ்னிந்தர் வேண்டுமென்றே தனது அனுமதியின்றி தவறான படங்களை பரப்பி தவறான புரிதலை ஏற்படுத்த முயன்றதாக அமலா விளக்கம் அளித்துள்ளார்.
இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஜெகத் திடீரென்று நடனக் கலைஞர்களிடம் வந்து சேர்ந்து கொள்கிறார். நடனமாடும் போது திடீரென மோதிரத்தை எடுத்து அமலாவிடம் ப்ரோபோஸ் செய்தார். அந்த வீடியோவில் அமலா அந்த மோதிரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஜெகத்துக்கு அன்பான முத்தம் கொடுப்பதைக் காணலாம். வீடியோவில் Wedding Bells என்ற ஹேஷ்டேக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காதலனுக்கு லிப் லாக் கொடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை இணையதளத்தில் ஹெச்டி குவாலிட்டியில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நாலு சுவற்றுக்குள் செய்ய வேண்டிய சம்பவத்தை எல்லாம் இப்படி படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவது நியாயமா என பலர் அமலா பாலை மோசமாக திட்டி வருகின்றனர்.