ஒரு அமைச்சரின் காதல் கதை.. யார் அந்த அமைச்சர் ?.. அரசியல் படத்துல இது ஒரு புதுமாதிரி..

Amaichar movie tends to be a love story with few true happenings

தமிழ் திரையுலகில் ரோஜா கூட்டம், 3 ரோசஸ், கிச்சா வயசு 16 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஜெய் ஆகாஷ். நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் கதாநாயகனாக இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அமைச்சர்’. இப்படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக தேவிகா நடித்துள்ளார்.

Amaichar movie tends to be a love story with few true happenings

இப்படத்தில் காவல் துறை முன்னாள் அதிகாரி ராஜன், சர்வதேச விளையாட்டு வீரர் செளந்தரராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான புஷ்பவதி, அருணாச்சலம் போன்ற ரியல் ஹீரோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ள இப்படத்தை எல்.முத்து குமாரசாமி இயக்கி உள்ளார்.

Amaichar movie tends to be a love story with few true happenings

சினிமாவில் பலவிதமான அரசியல் படங்கள் வந்திருந்தாலும், இது ஒரு அமைச்சரின் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாக இயக்குனர் எல்.முத்து குமாரசாமி கூறியுள்ளார்.

Amaichar movie tends to be a love story with few true happenings

இதைக்கேட்டதும் பலருக்கும் யார் அந்த அமைச்சர் என்ற கேள்விதான் எழும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது நிஜக்கதை இல்லை என தெரிவித்துள்ளார் இயக்குனர். இருப்பினும் சில நிஜ சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கக்கூடிய வகையில் கதை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

குற்றாலம், திருத்தணி மற்றும் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படம், வருகிற ஏப்ரல் 29ம் தேதி வெளியாகவுள்ளது.

Share this post