AK61 படப்பிடிப்பில் இருந்து கசிந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. நீங்களே பாருங்க.. !
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.
இப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.
வெளிநாட்டில் பைக் ரைட், பல கோடி மதிப்பிலான காருடன் போஸ், ரசிகர்களுடன் போட்டோஸ் என பல புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து வைரல் ஆனது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித், தனது ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதினார்.
இலங்கையை சேர்ந்த லாவன் என்பவர் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன். அவரது நண்பர் ஒருவர் லண்டனில் வசித்து வருகிறார். தற்போது அங்கு சுற்றுலா சென்றுள்ள அஜித்தை நேரில் சந்தித்த லாவனின் நண்பன், அவருக்காக அஜித்திடம் பேசி கைப்பட எழுதி வாங்கிய கடிதத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில், அஜித் கடிதம் எழுதும்போது எடுத்த புகைப்படத்தை போட்டோஷாப்பில் எடிட் செய்த அஜித் ரசிகர்கள், அவர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் அமர்ந்து எழுதும்படி மாற்றியமைத்து உள்ளனர். கிட்டத்தட்ட ஒரிஜினல் போலவே இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
நடிகர் அஜித் குமார் லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருள் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் கோட் சூட்டில் மாஸ் ஆக உள்ளதால் மகிழ்ச்சியுடன் வீடியோவை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பரவி வரும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி AK61 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனி கபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 13. நடிகர் அஜித்தும் ஸ்ரீதேவி மீது அதிகம் மரியாதை வைத்திருந்தார். இதனால், அன்றைய தேதியில் சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், AK 61 படப்பிடிப்பின் இடத்தில் இருந்து வீடியோ ஒன்று லீக்காகியுள்ளது. அந்த ஸ்டண்ட் காட்சியின் வீடியோ தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
#AK61 Shooting Some Stunt sequence 🔥 pic.twitter.com/y9h32JQ5gw
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) July 20, 2022