சினிமா'ல வந்த பிசாசுலேயே இதுதான் ஹாட்டான பிசாசு ! ஆண்ட்ரியா போட்டோக்கு செல்லமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்
மேடை நிகழ்ச்சிகள், டிராமா போன்றவற்றில் பங்கேற்று தனது கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுள்ளார். விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.
பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது. ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரன்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, கா, மாளிகை, பிசாசு 2, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பல நடிகைகள் செய்ய தயங்கும் முயற்சியில் நடிகை ஆண்ட்ரியா துணிந்து இறங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ஆண்ரியாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த நடிகைகள் கூட, தங்கள் படங்களில் டப்பிங் பேச தயங்குவது உண்டு. ஆனால் அந்த மொழியே தெரியாமல் கற்றுக்கொண்டு டப்பிங் பேச வேண்டும் என்பதற்கு நிச்சயம் ஒரு தைரியம் வேண்டும். அந்த முயற்சியில் தற்போது துணிந்து இறங்கியுள்ளார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா நடிப்பில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பிசாசு 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வெளியான பின்னர் தன்னுடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஆண்ட்ரியா காத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ‘பிசாசு 2’ படத்திற்கு முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் ஆண்ட்ரியா. இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த பிசாசு 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ள நிலையில், புதிய லுக்கில் போஸ் கொடுத்து, புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வெளியான ஆண்ட்ரியாவின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், இதுவரை சினிமாவில் வந்த பிசாசுகளில் இதுதான் பெஸ்ட் பிசாசு என்று செல்லமாக கூறியுள்ளனர். தற்போது அவரின் கிளாமர் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.