கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் ? இணையத்தில் வெளியான புகைப்படங்கள் !
1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 1991ம் ஆண்டு, சூப்பர்மாடல் போட்டியில் பங்கேற்ற இவர், அதன் பின்னர், பல விளம்பர படங்களில் அமீர் கான் உடன் நடித்திருந்தார். முக்கியமாக, பெப்சி விளம்பர படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
1997ம் ஆண்டு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் நடித்திருந்தார். பின்னர், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்திருந்தார். டாப் முன்னணி கதாநாயகர்களுடன் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இராவணன், எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
2007ம் ஆண்டு பிரபல நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் அவர்களை இருவீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2011ம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில், இவர் நந்தினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா உடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற உடை அணிந்து அதற்கு மேல் ஓவர்கோட் ஒன்றையும் போட்டிருந்தார்.
அவர் கர்ப்பமாக இருப்பதை மறைப்பதற்காகவே அந்த ஓவர்கோட்டை போட்டிருந்ததாக கூறி பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவிலும் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதனால் தான் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவி வருகின்றன.