AK61 அஜித்தின் வில்லன் கெட்டப் - Rolex சூர்யாக்கே டஃப் கொடுப்பார் போலயே.. மெர்சலாக்கும் ஸ்டில்ஸ் !

Ak61 ajith getup is getting viral than suriya rolex

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பைக் ரேஸ், நகை கொள்ளை, போதை மருந்து பழக்கம் உள்ளிட்டவைகள் கொண்ட கதைக்களமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், போனி கபூர், எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் AK61 உருவாகவுள்ளது.

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகள் கழித்து அஜித் இத்திரைப்படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியுள்ளார்.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இப்படத்திற்காக அஜித் புதிய லுக்கிற்காக, தனது உடல் எடையில் 25 கிலோ குறையவுள்ளார் எனவும் ஸ்டைலான அஜித்தை இதில் பார்க்கப்போகிறோம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அஜித் புதிய ஹேர் ஸ்டைல், நீண்ட தாடி, காதில் கடுக்கன் என செம்ம கெத்தான தோற்றத்திற்கு மாறி உள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியானதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இந்நிலையில், AK61 படத்தில் பணியாற்றும் நடனக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் அஜித் தனித்தனியாக போட்டோ எடுத்துள்ளார். வெள்ளை நிற சட்டை, கேசுவல் பேண்ட் அணிந்து செம்ம மாஸான கெட் அப்பில் இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் வரும் ரோலெக்ஸ் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அஜித்தின் வில்லன் கெட்-அப் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Ak61 ajith getup is getting viral than suriya rolex

Ak61 ajith getup is getting viral than suriya rolex

Share this post