Ajith Kumar Viral Photos : பாரம்பரிய உடையில் கோவிலுக்கு திடீர் விசிட்.. வைரலாகும் போட்டோஸ்

Ajith kumar visits guruvayur temple photos getting viral

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். எச்.வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது. பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Ajith kumar visits guruvayur temple photos getting viral

வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாகவும், ஒன்று மங்காத்தா பாணியில் மிரட்டலான வில்லன் ரோலுக்காக நீளமான வெள்ளை நிற தாடி, காதில் கடுக்கன் என வித்தியாசமான தோற்றத்துக்கு மாறி உள்ளார் அஜித் என சொல்லப்படுகிறது.

Ajith kumar visits guruvayur temple photos getting viral

ஏ.கே.62 படம் குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன்படி போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான விக்னேஷ் சிவன் தான் இயக்க உள்ளார்.

Ajith kumar visits guruvayur temple photos getting viral

இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி அணிந்து கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Share this post