கடைசியாக நடிகர் அஜித் தனது படத்திற்காக கலந்து கொண்ட பிரஸ் மீட்.. ட்ரெண்டாகும் வீடியோ..

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.
இந்நிலையில் அஜித் பொதுவாக அவரின் திரைப்படங்களின் ப்ரோமோஷன்ல் கலந்து கொள்ளவதை தவிர்த்து வருபவர். அவர் அப்படி கடைசியாக அவரின் திரைப்பட நிகழ்ச்சிகாக கலந்து கொண்ட வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம், ரீமேக்காக உருவானாலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து. அப்போது அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா படக்குழு பிரஸ் மீட் நடத்தியது. அதில் கலந்து கொண்ட அஜித் பில்லா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அவர் கடைசியாக தனது திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டது அதுவே கடைசி என சொல்லப்படுகிறது.
• Exclusive Billa Press Meet Video ThalaAJITH Sir Speech ❤️#AK61 | #AjithKumar | #AK62 pic.twitter.com/BIGZqzrthl
— AK FANS UNIVERSE™ (@ThalaFansUniv) July 6, 2022