அஜித்துடன் நடித்துள்ள ஷாலினி தங்கை ஷாம்லி.. அட இத்தன நாளா தெரியாம போச்சே !

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் குமார் அவர்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலானது.
இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் பிரபல நடிகை ஷாலினி. ஷாலினி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 50திற்கும் மேற்பட்ட படங்களில் வெற்றிகரமாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
7 வருட இடைவேளைக்கு பிறகு கதாநாயகியாக என்ட்ரி கொடுத்த ஷாலினி, மலையாளம் மற்றும் தமிழில் 12 படங்களில் மட்டுமே நாயகியாக தோன்றினார். விஜய் அஜித், மாதவன் என முன்னணி நாயகர்களுடன் ஷாலினி நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தது.
1999ல் அமர்க்களம் படப்பிடிப்பில் காதலில் விழுந்த அஜித்-ஷாலினி, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு, அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட இரு படங்களில் நடித்தார். அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஷாலினி அவர்களின் தங்கை ஷாம்லி பல திரைப்படங்களில் நடிகையாக நடித்துள்ளார். அவ்வப்போது ஷாமிலி தனது அக்கா ஷாலினி மற்றும் அவரது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் காதலுக்கு பல உதவி ஷாமிலி செய்வதாக ஷாலினி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஷாலினி மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக படத்தில் நடித்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜீத்தின் படத்தில் ஷாமிலியும் நடித்துள்ளார். அதாவது அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.
இப்படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு என பலர் நடித்திருந்தனர். இதில் தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கடைசி தங்கையாக ஷாமிலி நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஷாமிலி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.