நடிகைகள் செய்ய தயங்கும் முயற்சியில் துணிந்து இறங்கிய ஆண்ட்ரியா.. வீடியோ பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் !

Andrea jermiah dubs in telugu for the first time

மேடை நிகழ்ச்சிகள், டிராமா போன்றவற்றில் பங்கேற்று தனது கலை துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல திறமைகளை கொண்டுள்ளார். விளம்பர படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் என்னும் திரைப்படத்தில் சாதாரண கூட்டத்தில் ஒரு பெண்ணாக நடித்திருந்தார்.

Andrea jermiah dubs in telugu for the first time

பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து, மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, உத்தம வில்லன், தரமணி, விஸ்வரூபம் 2 போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Andrea jermiah dubs in telugu for the first time

முக்கியமாக, வடசென்னை திரைப்படத்தில் இவரது சந்திரா கதாபாத்திரம் செம வைரல் ஆனது. ஒரு போல்ட் கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து, மாஸ்டர், அரன்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும், வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன, தங்கமகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது, கா, மாளிகை, பிசாசு 2, வட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Andrea jermiah dubs in telugu for the first time

இந்நிலையில் பல நடிகைகள் செய்ய தயங்கும் முயற்சியில் நடிகை ஆண்ட்ரியா துணிந்து இறங்கியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை ஆண்ரியாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Andrea jermiah dubs in telugu for the first time

பொதுவாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த நடிகைகள் கூட, தங்கள் படங்களில் டப்பிங் பேச தயங்குவது உண்டு. ஆனால் அந்த மொழியே தெரியாமல் கற்றுக்கொண்டு டப்பிங் பேச வேண்டும் என்பதற்கு நிச்சயம் ஒரு தைரியம் வேண்டும். அந்த முயற்சியில் தற்போது துணிந்து இறங்கியுள்ளார் ஆண்ட்ரியா.

Andrea jermiah dubs in telugu for the first time

ஆண்ட்ரியா நடிப்பில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘பிசாசு 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வெளியான பின்னர் தன்னுடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என ஆண்ட்ரியா காத்திருக்கிறார்.

Andrea jermiah dubs in telugu for the first time

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ‘பிசாசு 2’ படத்திற்கு முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் ஆண்ட்ரியா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேச முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு தெலுங்கு கற்றுக் கொடுக்கும் நபர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பலரும் ஆண்ட்ரியாவின் துணிச்சலை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

Share this post