ஹோட்டலில் ஊழியர்களுக்கு கேக் ஊட்டிய அஜித்.. செம்ம ஸ்மார்ட் லுக்.. ட்ரெண்டாகும் போட்டோஸ் !
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.
தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.
பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார்.
இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது. இந்நிலையில், அஜித் AK61 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அஜித்திற்கு பிரத்யேகமாக கேக் செய்துள்ளனர். இதனை, அஜித் கட் செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு அன்புடன் ஊட்டினார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.