அரியவகை நோயால் Justin Bieberக்கு முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது.. அதிர்ச்சி தரும் வீடியோ பதிவு !

Justin beiber got affected by rare syndrome video getting viral

பாப் இசைப் பாடல்களைப் பாடி பிரபலமான பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 28 வயதே ஜஸ்டின், கனடாவின் டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வந்தார். இவரது பல பாடல்கள் தற்போது உலகளவில் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் உள்ளது.

Justin beiber got affected by rare syndrome video getting viral

இப்படி பிரபலம் அடைந்த ஜஸ்டின், ‘ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்’ (Ramsay Hunt Syndrome) என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் வீடியோ வடிவில் தனது நிலைமையை எடுத்துரைத்து பதிவிட்டுள்ளார்.

Justin beiber got affected by rare syndrome video getting viral

வைரஸ் தாக்குதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் என் முகத்தின் ஒரு பக்கம் செயல்படவில்லை. அதேசமயம் படிப்படியாக கேட்கும் திறனையும் இழக்கும் ஆபாயமும் உள்ளது.

Justin beiber got affected by rare syndrome video getting viral

ஒரு பக்கம் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை சுத்தமாக அசைக்க முடியவில்லை. அதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகத் தான் இருக்கும். ஆனால் என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை, அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

Justin beiber got affected by rare syndrome video getting viral

இதிலிருந்து மீள முகத்திற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். ஓய்வு தேவைப்படுகிறது. நிச்சயம் 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this post