ஆ… ஹா… கல்யாணம்… அனுஷ்காவுக்கு டும்டும்டும் – மாப்பிள்ளை யார் இவரா?
சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றியதால் இன்று வரை அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறார்.
பாகுபலி 1 படத்திற்கு பின் உடல் எடை கூடியதும் வயது கூடியதாலும், பட வாய்ப்பினை இழந்து வருகிறார். சினிமா வாழ்க்கை அப்படி என்றால் திருமண வாழ்க்கை அதற்கும் மேலே தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
சமீபத்தில் 42 வயதை எட்டிய அனுஷ்கா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையில், நடிகர் பிரபாஸ்வுடன் காதலில் இருப்பதாகவும், கூறப்பட்டு வந்தது. தற்போது, அனுஷ்கா செட்டி நடிகர் பிரபாஸை 2024-ஆம் ஆண்டு கறம் பிடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமாக்களை இயக்குனர்களை வைத்து வித்தியாசமான செட்டமைத்து அதிக பொருள் செலவில், திருமணத்தை நடத்த திட்டம் போட்டு உள்ளார்களாம். அனுஷ்காவின் திருமணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அக்கட தேசத்தில் இந்த தகவல் பரவி வருகிறது.