அட கேப்டனா இது, செம ஸ்டைலாக, கெத்தாக இருக்காரே?- இதுவரை பார்க்காத அன்ஸீன் போட்டோ..!
80 90களில் ஆக்சன் ஹீரோவாக கோலிவுட்டில் கலக்கி வந்தவர் தான் விஜயகாந்த். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் பல போராட்டங்களுக்குப் பிறகு மதுரையில் இருந்து நாயகனாக நடிக்க வந்தவர் விஜயகாந்த்.
புரட்சிகரமான வசனங்கள் கால்களில் எகிறி அடிக்கும் வித்தியாசமான சண்டை காட்சிகள் என தனக்கென தனி ஒரு அடையாளத்தை வைத்திருந்தார்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்த விஜயகாந்த், முதல்வர் இடத்திற்கு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட இப்போது வீட்டிலேயே முடங்கியுள்ளது அனைவரிடத்திலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் ஒரு சூப்பரான புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில், விஜயகாந்த் தனது காரின் முன்பு நின்று செம ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்துள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவர் இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.