2வது திருமணம் ஆன 5 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல தமிழ் பட நடிகை.. குழப்பத்தில் ரசிகர்கள்
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர். தமிழில் 2010ம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து கோலிவுட்டில் கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற படங்களில் நடித்து, எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் மீண்டும் மலையாள படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
கதாநாயகியாக மட்டுமின்றி பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய அஞ்சலி நாயருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இவருக்கு மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் ரகசிய போலீஸாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
பின்னர் தமிழில், சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி என நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சீனு இராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் ரிலீசான மாமனிதன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
2011ம் ஆண்டு அஞ்சலி நாயர்,அனீஷ் என்ற டைரக்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நடிகை அஞ்சலி நாயர், கடந்த பிப்ரவரி மாதம் 2வது திருமணம் செய்துகொண்டார்.
மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 5 மாதங்களே ஆகும் நிலையில், தற்போது நடிகை அஞ்சலி நாயருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி, அப்போ நடிகை அஞ்சலி நாயர், அஜித் ராஜுவை மறுமணம் செய்துகொள்ளும் முன்னரே கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.