21 வருடங்களுக்கு முன் ஒன்றாக நடித்துள்ள ரோலெக்ஸ் & ஏஜென்ட் டினா.. வைரலாகும் போட்டோ !
கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 350 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆனது.
இப்படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 1 மாதத்திற்கும் மேல் ஆன நிலையிலும், இப்படத்தின் vibes இன்னும் குறையவில்லை என்பதே உண்மை. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி reference பயன்படுத்து லோகேஷ் உருவாகியிருந்தது குறித்தும் அனைவர்க்கும் தெரியும்.
இதில் எதிர்பாராத சஸ்பென்ஸ் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் விதத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது.
மேலும் இப்படத்தில் ஆச்சரியமளிக்கும் படியாக அமைந்த மற்றொரு கதாபாத்திரம் ஏஜென்ட் டினா. ஏஜென்ட் டினா கதாபாத்திரத்தில் நடன கலைஞர் வசந்தி அசத்தியிருந்தார். அவரது கதாபாத்திரம் பெரிதும் ஈர்த்தது. டினா (எ) வசந்தி இதற்கு முன் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடனமாடியுள்ளார்.
அப்படி அவர் முக்கிய நடிகர்களுடன் நடனமாடிய புகைப்படங்கள் திரைப்படம் வெளியான சமயம் இணையத்தில் செம வைரலாகின. மேலும் தற்போது ப்ரேண்ட்ஸ் திரைப்படத்தின் வசந்தி, சூர்யா மற்றும் விஜய்யுடன் நடனமாடியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை 21 வருடங்களுக்கும் முன் ரோலெக்ஸ் மற்றும் ஏஜென்ட் டினா ஒன்றாக நடனமாடியுள்ளனர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.