பாலா'வ விட சைக்கோ.. வாழை மட்டையில் நடிகர் வாங்கிய அடி.. பிரபல இளம் தமிழ் இயக்குனரின் உண்மை முகம்..!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும் தனக்கென தனித்துவமான கதை மற்றும் திரைப்படங்களை உருவாக்கி ஹிட் கொடுப்பவர் இயக்குனர் பாலா.
அவர் படத்தில் ரியாலிட்டிக்காக நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிப்பை வாங்கும் திறமை கொண்டவர். இதனால் நடிகர் நடிகைகளே அவர் படத்தில் யோசித்து நடிக்க சம்மதம் கூறுவார்கள் என சொல்லப்படுகிறது.
கலைஞர்களை படுமோசமாகவும் நடத்துவார் என்றும் அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அஜித் நான் கடவுள் படத்திலும், சூர்யா வணங்கான் படத்திலும் எஸ்கேப் ஆனார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பாலாவிடம் பணியாற்ற நிறைய பொறுமையும், தைரியமும் வேண்டும் என பல விஷயங்கள் உலா வருகின்றன. இந்நிலையில், நடிகர் ஒருவர் பாலாவிற்கு இணையாக இன்னொரு தமிழ் இயக்குனரும் அப்படி டெரராக நடந்து கொள்வார் என கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலாவையே மிஞ்சும் அளவிற்கு உள்ள ஒரு சைக்கோ இயக்குனர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மாரி செல்வராஜ் தான் என சொல்லப்படுகிறது.
இவர் எடுக்கும் காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் யார் என்று கூட பார்க்காமல் அடித்து விடுவாராம். அப்படி அடி வாங்கியவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என சொல்லப்படுகிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் ஷூட்டிங்கின் போது படத்தின் கதாநாயகனான கதிரை காலில் செருப்பு போடாமல் முள் பாதையில் இயக்குனர் ஓட விட்டுள்ளார்.
மேலும், அந்த காட்சி சரியாக வந்த பொழுது கூட திரும்ப திரும்ப அதில் ஓட வைத்துள்ளார். அந்த காட்சி முடிக்கும் பொழுது காலில் ரத்தம் சொட்ட சொட்ட வந்துள்ளார். இதனால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அடி வாங்கும் காட்சியில் எதார்த்தம் இல்லை என்றால் வாழை மட்டையால் நிஜமாகவே அடித்து அந்த சீனை தத்ரூபமாக எடுப்பாராம்.
மாரி செல்வராஜ் தன்னுடன் இருந்த உதவி இயக்குனர்களை வாழை மட்டையால் அடி அடித்து இருப்பதாக சொல்கிறார்கள்.
ஒரு நடிகரின் முடியை பிடித்து வெறிகொண்டு இழுத்து இருக்கிறார். தயவுசெய்து அந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் அதை நான் வேண்டுகோளாகவே வைக்கிறேன். இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என நடிகர் டெலிபோன்ராஜ் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.