10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு OK சொன்ன திரிஷா.. இத யாருமே எதிர்பாக்கல.. வைரலாகும் ட்வீட்..!
பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். 90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.
விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில், பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 பாகங்களில் நடித்து மக்கள் ஆதரவை பெற்ற இவர், லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படமானது அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், திரிஷா திரையுலக பிரபலம் ஒருவரின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளது செம வைரலாகி வருகிறது.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. இதில் நடிகர் வெங்கடேஷ், நடிகை த்ரிஷா நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் நடிகர்கள் தனுஷ், நயன்தாரா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ’ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குநர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு தற்போது ’நான் ரெடி’ என நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளது இணையத்தில் பேச்சுபொருளாகியுள்ளது.