யுவனின் 25 ஆண்டு கால இசைப்பயணம்..! நடிகர் கார்த்தி செய்த செயல்.. நெகிழ்ந்த யுவன்.!

Actor Karthi Tamil Cinema Music Director Yuvan Shankar Raja

நடிகர் கார்த்தி சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். பருத்தி வீரனில் துவங்கிய இவரது சினிமா பயணம் தொடர்ந்து வருகிறது.எந்தவிதமான கேரக்டரிலும் தன்னை பொருத்திக் கொண்டு தன்னுடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். சோஷியல் நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.இவரது அடுத்தடுத்த படங்களான சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

சரத்குமார் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் ‘அரவிந்தன்’. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். அதன்பிறகு ‘தீனா’, ‘துள்ளுவதோ இளமை’, ‘மௌனம் பேசியதே’ உள்ளிட்ட படங்கள் தொடங்கி ‘மாநாடு’, ‘வலிமை’ படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார்.

காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் தனித்துவமாக அடையாளப் படுத்தி அனைவரையும் கவர்ந்தார். இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

Actor Karthi Tamil Cinema Music Director Yuvan Shankar Raja

கார்த்தியின் பள்ளித் தோழராக யுவன் சங்கர் இருந்துள்ளார். இருவருக்குள் அப்போதிலிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. இதை பல நிகழ்ச்சிகளில் இருவரும் பகிர்ந்துள்ளனர்.இதனையொட்டி யுவன் சங்கர் ராஜாவுக்கு சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. இதில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் வாட்ச் பரிசளித்து நட்பைப் போற்றியுள்ளார் கார்த்தி.

Share this post