தலைவர்169 படத்தின் First லுக்.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் மாஸ் அப்டேட் !

Thalaivar169 first look to be released on superstar birthday

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தலைவர்169.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது.

Thalaivar169 first look to be released on superstar birthday

பீஸ்ட் பட தோல்வியினால் வேறு இயக்குனர் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், நெல்சன் தான் படத்தை இயக்கப்போகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Thalaivar169 first look to be released on superstar birthday

கதைப்படி இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர் என தகவல் வெளியானது.

அதன்படி, ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகளாக அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

Thalaivar169 first look to be released on superstar birthday

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன.

அந்த வகையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க முயற்சித்து வந்த நிலையில், அவர் நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறு ஹீரோயினை இயக்குனர் நெல்சன் தேடி வருவதாக கூறப்படுகிறது.

Thalaivar169 first look to be released on superstar birthday

வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருக்கும் தலைவர்169 படத்தின் பர்ஸ்ட் லுக், ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post