சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அவர்களின் இன்னொரு பேரன்..!

Actor Nadigar Thilgam Sivaji Ganesan Grand Son Acting To Tamil Cinema

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அவர்களின் மகன்களில் ஒருவர் ராம்குமார் கணேசன், இவரின் மகன் தான் தற்போது தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

Actor Nadigar Thilgam Sivaji Ganesan Grand Son Acting To Tamil Cinema

இதனை பற்றி ராம்குமார் கணேசன் கூறியதாவது., ஏற்கனவே எனது மூத்த மகன் துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். அடுத்ததாக தர்ஷன் கணேசனும் நடிக்க வருகிறார்.புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தெருக்கூத்து நாடகங்களை அரங்கேற்றிவிட்டு தகுந்த பயிற்சிபெற்று வருகிறார். அவருக்கு பல பட நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என ராம்குமார் அவர்கள் கூறினார்.

Actor Nadigar Thilgam Sivaji Ganesan Grand Son Acting To Tamil Cinema

</div>

Share this post