சின்னத்திரை பிரபல சீரியலில் இயக்குநர் பாக்யராஜ்.. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா.?

இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டு திரையுலகில் வலம் வருபவர் கே.பாக்யராஜ். எந்த பாணியில் வந்தாலும் தமக்கே உரிய நகைச்சுவை கலந்தவகையில் மக்களை கவர்ந்து விடுவார்.
16 வயதினிலே படத்தில் அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், பல திரைப்படங்களை இயக்கியும், வேறு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பிரபலமாக விளங்கி வரும் இவர், தற்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல ஜீ தமிழ் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 எனும் சீரியலில் தான் நாயகி வித்யாவுடன் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி ரஞ்சித் சூழ்ச்சி செய்ய, இதில் இருந்து வித்யா எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை நோக்கி கதை நகர்கிறது. இதில் கோர்ட் வரை சென்றுவிட்ட இந்த வழக்கில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வழக்கில் தான், தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதி கேரக்டரில் சிறப்பு என்ட்ரியாக இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் நடித்து வருகிறார். பாக்யராஜ் பங்குபெறும் இந்த எபிசோடுகளில் அவர் தனக்கே உரிய இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பால் சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறார். இதற்கு முன், சித்தி 2, ராஜா ராணி, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களில் இவர் சிறய தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.