நயன்தாரா.. த்ரிஷா..சமந்தா.. என 16 தமிழ் முன்னணி நடிகைகளின் ராசிகள் என்னனு தெரிஞ்சுக்கோங்க ?

Zodiac signs of top tamil actress list

நடிகர்களுக்கு இணையாக தற்போதைய நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம், ஆர்மி, ஏன் இதையும் தாண்டி கோவில் கட்டக்கூடிய அளவிற்கு தீவிர ரசிகர்களும் உள்ளனர். இப்படி பெரும் கூட்டத்தை பெற திரையுலகில் நடிகைகளுக்கு அழகும், திறமையும் கூட கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை.

மிதமான அழகில் அறிமுகமான நடிகைகள் வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறுபவரும் உண்டு. பேரழகியாக இருந்தும் அவ்வளவு படங்கள் கிடைக்காமல் ஓரம்கட்டப்பட்ட நடிகைகளும் உண்டு. ஒருவர் வெற்றிக்கும் தோல்விக்கும் முக்கிய காரணமாக கருதப்படுவது அவர்களது ராசி எனலாம். முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த சில பிரபலங்களின் ராசி என்ன என்பது இதோ ஒரு தொகுப்பாக..

Zodiac signs of top tamil actress list

நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை சூட்டிக் கொண்டவர் நடிகை நயந்தாரா. ஐயா படத்தில் அறிமுகமாகி, தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். தற்போது பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். இவரது ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

திரிஷா

திரையுலகில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கான தனி இடத்தை தக்க வைத்து, தனக்கான தனி ரசிகர் கூட்டத்தை வெய்துள்ளவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு மொழிகளிலில் அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார். இன்றும் இவருடைய புகைப்படம் ஒன்று வந்தாலும் ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர். இவரது ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

சமந்தா

ஆரம்ப காலத்தில் பெரிதாக வரவேற்பு பெறாவிட்டாலும், தற்போது ஒரு பாடலுக்கு ஆடினாலும், ஒரு போட்டோ போட்டாலும் அதனை ட்ரெண்ட் செய்யும் அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளனர் சமந்தா. இவரது திரையுலக பயணம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. துணிச்சலான கதாபாத்திரங்களை தைரியமாக தேர்வு செய்து நடிப்பது இவரது மிகப்பெரிய பலம். தென்னிந்திய மொழி துவங்கி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் சமந்தாவின் ராசி ரிஷபம்.

Zodiac signs of top tamil actress list

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி பட்டம் என்பது திறமை, அறிவு மற்றும் அழகு ஆகியவற்றை தாண்டி கடின உழைப்பும் தேவை. அப்படி உலக அழகி பட்டத்தை பெற்ற பின்னர், இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து, இதன் நடுவே, தனது குடும்ப வாழக்கையையும் சீரும் சிறப்புமாய் ஏற்படுத்தி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராயின் ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

கீர்த்தி சுரேஷ்

சாதாரண கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ‘மகாநதி’ திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதற்காக தேசிய விருதை பெற்றார். சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் ராசி துலாம்.

Zodiac signs of top tamil actress list

சிம்ரன்

90ஸ் களின் கனவு கன்னியாக இருந்த இடையழகி சிம்ரன், விஜய், அஜித், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், சூர்யா, பிரபு தேவா என மிச்சம் வைக்காமல் அனைத்து டாப் நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளவர். இவருடைய ராசி சிம்மம்.

Zodiac signs of top tamil actress list

அனுஷ்கா

உயரம், எடை, அழகு என அனைத்தும் ஒன்று சேர்ந்து தேவதை உருவாக ரசிகர்கள் பேவரைட் நடிகை அனுஷ்கா. அழகே பொறாமைபடும் பேரழகு. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தற்போது வரை தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அனுஷ்காவின் ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

தமன்னா:

மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கும் அளவிற்கு மெழுகு டால் அழகியான தமன்னா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரை உலக அளவிற்கு புகழ் பெற வைத்த திரைப்படம் பாகுபலி . தற்போது பாலிவுட் திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய ராசி தனுசு.

Zodiac signs of top tamil actress list

ஆண்ட்ரியா

பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பல முகங்களை வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பது, bold குரல் என ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆண்ரியா ராசி தனுசு.

Zodiac signs of top tamil actress list

அசின்

கேரளத்து பைங்கிளியான அசின், மாடலிங் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர். முன்னணி நடிகையாக இருக்கும் போதே மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். இவரது ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

அமலா பால்

மைனா திரைப்படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை அமலா பால். திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என மீண்டும் படங்களில் முழு மூச்சுடன் நடிக்க துவங்கி விட்டார் இவரது ராசி விருச்சிகம்.

Zodiac signs of top tamil actress list

காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருத்தி நடிக்கும் திறமை கொண்டவர். திருமணம், குழந்தை என தற்போது நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார். இவரது ராசி மிதுனம்.

Zodiac signs of top tamil actress list

ஹன்சிகா

கொழு கொழு ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி குஷ்புவாக இருந்த ஹன்சிகா, சமீப காலமாக ஒல்லி பெல்லி நடிகையாக மாறியுள்ளார். இவரது ராசி சிம்மம்.

Zodiac signs of top tamil actress list

டாப்ஸி

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, தற்போது அதிகமாக பாலிவுட்டில் கலக்கி வருகிறார். இவரது ராசி சிம்மம்.

Zodiac signs of top tamil actress list

ஸ்ருதிஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், நடிகையாக மட்டும் இன்றி பாடகியாகவும் வலம் வருகிறார். இவருடைய ராசி கும்பம்.

Zodiac signs of top tamil actress list

ராகுல் ப்ரீத் சிங்

தமிழ் திரையுலகில் NGK, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என வெகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவருடைய ராசி துலாம்.

Zodiac signs of top tamil actress list

Share this post