'யாஷ் இனி சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க மாட்டார்.. பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார்' - கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்

Yash will act only in pan india films said by kgf producer

2007ம் ஆண்டு முதல் கன்னட படங்களில் நடித்து வருபவர் நடிகை யாஷ். 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வந்தாலும்,KGF படத்தின் மூலம் தற்போது இந்திய லெவல் மட்டுமல்லாது வேர்ல்ட் பேமஸ் ஆகியுள்ளார்.

2018ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரிலீசான KGF முதல் பாகம் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆனது.

Yash will act only in pan india films said by kgf producer

கே.ஜி.எஃப் படத்தில் ராக்கி பாய் என்னும் டான் கதாபாத்திரத்தில் மாஸாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த யாஷ், தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

கே.ஜி.எஃப் 2 வெளியாகி வெகு சில நாட்களிலேயே 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் யாஷ்.

Yash will act only in pan india films said by kgf producer

கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3ம் பாகமும் படக்குழு அறிவித்தனர்.

இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

Yash will act only in pan india films said by kgf producer

இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலும் அடுத்தடுத்து வெளியானது.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி 2024ம் ஆண்டு வெளியாகும் என படக்குழு சார்பில் சொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரல் ஆனது.

Yash will act only in pan india films said by kgf producer

இந்நிலையில், தற்போது, கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் யாஷ் குறித்து பேட்டியில் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பேட்டியில் பேசிய அவர், ‘யாஷ் தற்போது மிகப்பெரிய இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துவிட்டார், அவர் இனி கன்னட நடிகரோ, தென்னிந்திய நடிகரோ இல்லை. எனவே, அவரால் இனி சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாது, பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார்’ என பேசியுள்ளார்.

Share this post