'விஜய் டிவி பக்கம் வர மாட்டேன்' - ரசிகர் கேள்விக்கு VJ பாவனா அதிரடி..

Vj bhavana not interested to back to vijay tv because of this

RJவாக தனது கலை பயணத்தை தொடங்கிய பாவனா, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பணியாற்றத் தொடங்கினார். முதன் முதலாக, ராஜ் தொலைக்காட்சியில் பீச் கேர்ள்ஸ் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பிறகு, 2011ம் ஆண்டுக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் முழு நேர தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

விஜய் தொலைக்காட்சியில், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 போன்ற பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன் நடுவே, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபில்) தொடரில், கபடி லீக் ப்ரோ போன்ற தொடர்களில் ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட் ஆக தொகுத்து வழங்கி வந்தார்.

Vj bhavana not interested to back to vijay tv because of this

கிட்டத்தட்ட 10 வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த பாவனா, சிவகார்த்திகேயன், மாகாபா ஜோடியாக பணியாற்றி வந்தார். இவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி படு சூப்பர் டூப்பர் ஹிட்.

அதில் சிவகார்ததிகேயனை பாவனாவை கலாய்ப்பதும், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை ஓட்டுவதும் மிகவும் கலகலப்பாக அந்த சீசன் இருந்தது.

தற்போது திடீரென கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இவருக்கு என்ன பிரச்சனை, வேறு ஏதும் காரணம் உள்ளதா என அவர் தரப்பில் ஏதும் கூறவில்லை.

இந்நிலையில், அவரிடம் ரசிகர் ஒருவர், ‘விஜய் டிவிக்கு எப்போது வருவீர்கள்’ என கேட்க அதற்கு, ‘இனி விஜய் பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல அவர்கள் விரும்புகிறார்கள். இப்போது அதுவே அவர்கள் வழக்கமாக மாறிவிட்டது. அது எனது ஸ்டைலுக்கு மாறாக உள்ளது’ என கூறியுள்ளார்.

Share this post