மீண்டும் படப்பிடிப்பில் 'விக்ரம்'.. வேற லெவெல் அப்டேட்.. ஆனா லோகேஷ் இயக்கத்துல இல்லயாமே !

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை லோகேஷ் கையாண்டுள்ள விதம் சிறப்பு. இது 100 சதவீதம் லோகேஷின் ஃபேன் பாய் சம்பவம் தான்.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

மேலும், படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 350 கோடியை கடந்து சென்று வருகிறது. அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது. விக்ரம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, துணை இயக்குனர்களுக்கு பைக், இயக்குனர் லோகேஷுக்கு கார், சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்ச் என பரிசளித்த தயாரிப்பாளர் மற்றும் படத்தின் இயக்குனருமான கமல், விக்ரம் சக்சஸ் மீட்டில் அசைவ சமபந்தியில் விருந்து நடந்தது. இதில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு 40 வகையான உணவு பரிமாறப்பட்டதாக அதன் மெனு புகைப்படம் வைரல் ஆனது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

‘விக்ரம்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இதன் ஓடிடி ரிலீசுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அதன் டிஜிட்டல் பிரீமியரை ஜூலை 8ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

அறிக்கைகளின்படி, படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ 98 கோடிக்கு விற்றுள்ளனர். இதை ஹாட் ஸ்டார் இணையதளம் பெற்றுள்ளதாக தெரிகிறது. ஓடிடிக்கான ப்ரோமோ தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

Vikram promo video shooting for ott release but not in lokesh kanagaraj direction

விக்ரம் படத்தில் கமல் பயன்படுத்திய துப்பாக்கி முதல் பிரபலமாக பேசப்பட்ட அனைத்து பொருட்களும் கொண்டுவரப்பட்டு அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது. இது ஹாட் ஸ்டார் சார்பாக உருவாக்கப்படுவதால் லோகேஷ் தலையீடு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post