அஜித் செலக்ட் பண்ணிய சுப்ரமணியபுரம் திரைப்படம்.. பிரபலம் அடைந்த இளம் ஹீரோ !

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய் தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த சென்னை 600 028 படத்தில் நடித்திருந்தார்.
பின்னர், சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்து தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். இதனைத் தொடர்ந்து, கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற பல பிரபல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான குற்றமே குற்றம் திரைப்படத்திற்கு பிறகு, பட்டாம்பூச்சி, எண்ணி துணிக, காபி வித் காதல் போன்ற பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது, இவர் சுப்ரமணியபுரம் திரைப்படம் பற்றி பேசிய பேட்டி வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அதில், சுப்ரமணியபுரம் ஷூட்டிங் போது, விஜய் மாதிரி இவரது செய்கைகள் இருக்க,’நம்ம வந்து 80’s ல படம் பண்றோம் அப்ப எல்லா விஜய் இல்ல’ என திட்டி அவரை நடிக்க வைத்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரல் ஆகி வருகிறது.
சென்னை 600 028 படத்தின் போது அஜித் குமார் உடன் நன்றாக பேசி வந்ததாகவும், அப்போது சில படங்கள் நடிக்க வாய்ப்பு வந்த போது, அஜித் தான் சுப்ரமணியபுரம் கதை வித்தியாசமாக இருப்பதாகவும் அதில் நடிக்க சொன்னதாகவும் ஜெய் கூறியுள்ளார்.
Ajith sir recommended Subramaniapuram - @Actorjai
— Ajith (@ajithFC) June 23, 2022
Link: https://t.co/XkA3nu0re7
| Video: Behindwoods | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/UYhWD4a3YO