'விக்ரமில் சந்தனம் சாகவில்லை.. அப்போ தளபதி67ல் சந்தனம் வருவாரா?' விஜய் சேதுபதியின் வைரல் பதில்

vijay sethupathi about santhanam character in thalapathy67 movie update getting viral

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.

vijay sethupathi about santhanam character in thalapathy67 movie update getting viral

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

vijay sethupathi about santhanam character in thalapathy67 movie update getting viral

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

vijay sethupathi about santhanam character in thalapathy67 movie update getting viral

தற்போது, விடுதலை, காந்தி டாக்ஸ், ஹிந்தியில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் படத்தில் டாக்ஸிக் வில்லனாக சந்தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் சந்தனம் அடிபட்டு இருப்பார், இறப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை. விஜய் சேதுபதி மீண்டும் தளபதி 67, LCU (லோகேஷ் சினிமெட்டிக் யூனிவெர்ஸ்) படங்களில் நடிப்பார் என்று விஜய் சேதுபதி ரசிகர்கள், நெட்டிசன்கள் ட்வீட் செய்து வந்தனர்.

vijay sethupathi about santhanam character in thalapathy67 movie update getting viral

இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்த விஜய் சேதுபதி, “சந்தனம் கதாபாத்திரத்தின் excitement முடிந்துவிட்டது, இனி அது வந்தாலும் மக்களுக்கு பிடிக்காது. தளபதி67 படத்தில் நான் நடிப்பது பற்றி எந்த தகவலும் லோகேஷ் என்னிடம் கூறவில்லை.சந்தனம் கதாபாத்திரம் மீண்டும் வருவதை நானும் விரும்பவில்லை”. அது இனி அவ்ளோதான் என்று end card போட்டுவிட்டார் விஜய் சேதுபதி.

Share this post