விக்ரம் படத்துல ரோலெக்ஸ் மாதிரி.. 'தீ தளபதி'க்கு சிம்பு.. சிம்பு + தளபதி விஜய் சர்ப்ரைஸ் காம்போ.. அடடா.. இதுதான் தெறி அப்டேட்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.
விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தில் இருந்து ‘தீ தளபதி’ என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ம் தேதி, 4 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடல் அறிவிப்பு குறித்த போஸ்டரில், செஸ் காயினில் உள்ள ராஜாவின் உருவ பிரதிபலிப்பும், அதை சுற்றி அக்னி ஜுவாலைகள் கொழுந்து விட்டு எறிவது போல் உள்ளது.
இதை பார்த்து ரசிகர்கள் அடுத்த சிங்கிள் பாடலில் தளபதி தீயாக வரப்போகிறார் என கொண்டாடி வருகின்றனர். தற்போது, இன்னும் சர்ப்ரைஸ் அப்டேட் ஆக, இந்த பாடலை சிலம்பரசன் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு + தளபதி விஜய் காம்போவில் இந்த பாடல் தீயாக இருக்கப்போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#TheeThalapathy Sung by @SilambarasanTR_ 🔥
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 3, 2022
Tomorrow 4pm pic.twitter.com/3QdbRF99RO