சங்கீதாவிற்கு முன் அந்த பிரபலத்தின் மகளை திருமணம் செய்யவிருந்த விஜய்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது விஜய், த்ரிஷா நடித்துள்ள லியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. ஒரு வருடம் கழித்து தான் விஜய் அரசியலுக்கு வருவார்.
இந்நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் இணையத்தில் பரவிவருகிறது.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் சோபாவின் தம்பி சுரேந்திரன் இவர் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வளம் வந்தவர். இவரது, மகளை தான் விஜய் முதல் முதலில் திருமணம் செய்ய இருந்தார். ஆனால், அதற்குள் சங்கீதா விஜய் இடையே காதல் மலர்ந்தது. சங்கீதாவை சோபாவுக்கு பிடித்திருந்ததால் தம்பியின் மகளை திருமணம் செய்யும் முடிவிலிருந்து பின் வாங்கி விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.